காணையில்மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள்
காணையில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
விழுப்புரம்
காணை,
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் சார்பில் காணை வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் வழங்கப்பட்ட சக்கர நாற்காலிகள், மூளை முடக்குவாத நாற்காலிகள், செவித் துணை கருவிகள், நடைபயிற்சி உபகரணங்களை வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஆரோக்கிய அனிதா வழங்கினார்.
இந்நிகழ்வின்போது சிறப்பு பயிற்சியாளர்கள் லியோனி, விஜயலட்சுமி, சரண்யா மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மேலும் உதவி உபகரணங்கள் பயன்படுத்தும் விதம் மற்றும் பராமரிப்பு முறைகள் பற்றி இயன்முறை மருத்துவர் சவுந்தரராஜன் விளக்கி கூறினார்.
Related Tags :
Next Story