பணி நிரந்தரம் செய்ய வேண்டும்- அங்கன்வாடி ஊழியர்- உதவியாளர் சங்கம் வலியுறுத்தல்
பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அங்கன்வாடி ஊழியர்- உதவியாளர் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
திருவாரூர்
திருவாரூர்:-
திருவாரூரில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் பிரேமா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தவமணி முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் முருகையன், மாவட்ட தலைவர் மாலதி, சங்க மாவட்ட நிர்வாகிகள் திரிபுரசுந்தரி, ராஜலட்சுமி, ரேவதி உள்பட பலர் கலந்து கொண்டனர். பணி நிரந்தரம் செய்து வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு அடுத்த மாதம் (ஜூலை) நடைபெறும் போராட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தில் 100 அங்கன்வாடி ஊழியர்கள் கலந்து கொள்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் மாலதி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story