விடுதி பணியாளர் சங்க கூட்டம்
விடுதி பணியாளர் சங்கத்தின் கூட்டம் நடந்தது.
சிவகங்கை
சிவகங்கையில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விடுதி பணியாளர் சங்கத்தின் கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முனீஸ்வரன் தலைமை தாங்கினார். மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்டத்திலுள்ள கல்லூரி விடுதிகளில் பணிபுரியும் சமையலர்களை பணி மூப்பு அடிப்படையில் 6 மாதத்திற்கு ஒரு முறை பணியமர்த்த வேண்டும். கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சமையலர்களுக்கு கையுறை, தொப்பி போன்றவை விடுதி பராமரிப்பு செலவினத்தில் வாங்கி தர வேண்டும், விடுதிகளில் காலியாக உள்ள சமையலர் மற்றும் காவலர் தூய்மை பணியாளர் உள்ளிட்ட காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் ஜெயபிரகாசம் நண்றி கூறினார்.
Related Tags :
Next Story