ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில்'லிப்ட்' டில் சிக்கிய 5 பேர் பத்திரமாக மீட்பு


ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில்லிப்ட் டில் சிக்கிய 5 பேர் பத்திரமாக மீட்பு
x

ஈரோட்டில் தனியார் மருத்துவமனையில் ‘லிப்ட்’ டில் சிக்கிய 5 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனா்

ஈரோடு

ஈரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரில் ஒரு தனியார் மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களை உறவினர்கள் தினந்தோறும் பார்த்துவிட்டு செல்வது வழக்கம். அதன்படி நேற்று ஒருசிலர் இந்த மருத்துவமனையில் 5-வது மாடியில் சிகிச்சை பெற்று வரும் உறவினர்களை பார்ப்பதற்காக வந்தனர். பின்னர் அவர்கள் உறவினர்களை பார்த்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்காக 'லிப்ட்' டில் பயணம் செய்தனர்.

'லிப்ட்' 2-வது மாடிக்கு வந்தபோது திடீரென பழுதாகி நின்றது. இதனால் அவர்கள் பதற்றம் அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினருக்கும், ஈரோடு தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் ஈரோடு தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இதற்கிடையில் மருத்துவமனை நிர்வாகத்தினர் 'லிப்ட்' பழுது நீக்குபவர்கள் மூலம் உடனடியாக 'லிப்ட்'டை சரி செய்தனர். 20 நிமிடங்களுக்கு பின்னர் 'லிப்ட்' டில் இருந்த 5 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டு வெளியில் கொண்டு வரப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story