அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனை
அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது.
அந்தியூர்
அந்தியூர் கால்நடை சந்தையில் காங்கேயம் காளை மாடு ஜோடி ரூ.2 லட்சத்துக்கு விற்பனையானது.
கால்நடை சந்தை
அந்தியூரில் கால்நடை சந்தை நடைபெற்றது. இந்த சந்தைக்கு அந்தியூர், அத்தாணி, ஆப்பக்கூடல், மேட்டூர், கொளத்தூர், பண்ணவாடி, தர்மபுரி, பர்கூர், ஈரோடு, எடப்பாடி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மாடுகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் நாட்டு பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.25 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.70 ஆயிரத்துக்கும், சிந்து பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.15 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.35 ஆயிரத்துக்கும், ஜெர்சி பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.20 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.40 ஆயிரத்துக்கும், பர்கூர் இன செம்மை நிற பசு மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.15 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், எருமை மாடு ஒன்று குறைந்தபட்ச விலையாக ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.75 ஆயிரத்துக்கும், கன்றுக்குட்டி ஒன்று ரூ.5 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.15 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.
ரூ.2 லட்சம்
காங்கேயம் காளை மாடு ஜோடி குறைந்தபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.2 லட்சத்துக்கும், கொங்கு காளை மாடு ஜோடி ரூ.80 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும், பர்கூர் இன செம்மை நிற காளை மாடு ஜோடி ஒன்று ரூ.30 ஆயிரத்துக்கும், அதிகபட்ச விலையாக ரூ.50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.
ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், திருப்பூர், மேட்டுப்பாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி சென்றனர்.