ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் சாலையின் மையப்பகுதியில் ஒளிரும் விளக்குகள் பொருத்தம்


ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில்  சாலையின் மையப்பகுதியில் ஒளிரும் விளக்குகள் பொருத்தம்
x

ஆண்டிப்பட்டி கணவாய் பகுதியில் சாலையின் மையப்பகுதியில் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது

தேனி

ஆண்டிப்பட்டி அருகே கணவாய் மலைப்பகுதியானது தேனி-மதுரை மாவட்டங்களின் எல்லை பகுதியாக திகழ்கிறது. இங்கு ஆபத்தான வளைவுகளில் அடிக்கடி விபத்துகள் நடந்து வந்தன. கோர விபத்துகள் பலரின் உயிரை பறித்துள்ளன. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, ஆண்டிப்பட்டி கணவாய் பகுதிகளை ஆய்வு செய்து விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதன்பேரில் தேனி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி மற்றும் ஆண்டிப்பட்டி போலீசார் இணைந்து அப்பகுதியில் விபத்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். சாலையின் மையப்பகுதியில் வரிசையாக எச்சரிக்கை கம்பங்கள் நடப்பட்டு, அதில் இரவும் ஒளிரும் விளக்குகள் பொருத்தப்பட்டன. மேலும், சாலையின் இருபுறமும் ஒளிரும் பட்டைகள், எச்சரிக்கை விளக்குகள் போன்றவை அமைக்கப்பட்டன. இவை பொருத்தப்பட்டதால் கடந்த ஒரு மாத காலத்தில் அப்பகுதியில் விபத்துகள் எதுவும் நடக்கவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story