அரக்கன்கோட்டை வாய்க்காலில் மூழ்கி வாலிபர் சாவுஅக்காள் வீட்டுக்கு வந்தபோது பரிதாபம்


அரக்கன்கோட்டை வாய்க்காலில் மூழ்கி வாலிபர் சாவுஅக்காள் வீட்டுக்கு வந்தபோது பரிதாபம்
x

அரக்கன்கோட்டை வாய்க்காலில் மூழ்கி வாலிபர் ஒருவா் பாிதாபமாக இறந்தாா்.

ஈரோடு

அக்காள் வீட்டுக்கு வந்தபோது அரக்கன்கோட்ைட வாய்க்காலில் மூழ்கி வாலிபர் உயிரிழந்தார்.

தண்ணீரில் மூழ்கினார்

ராமநாதபுரம் மாவட்டம் செவல்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி. இவருடைய மகன் நிஷாந்த் (வயது 25), எம்.பி.ஏ. பட்டதாரி. இவருடைய அக்காள் வீடு ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள தேள்கரடு வீதியில் உள்ளது. கடந்த 2 வாரங்களாக நிஷாந்த் அக்காள் வீட்டுக்கு வந்து தங்கியிருந்தார்.

இந்தநிலையில் நேற்று நிஷாந்த் கொடிவேரி அணை அருகே செல்லும் அரக்கன்கோட்டை வாய்க்காலில் குளிக்க சென்றார். வாய்க்காலில் குளித்தபோது நிஷாந்த் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதனால் அவர் தண்ணீரில் மூழ்கி விட்டார். அருகே குளித்து கொண்டு இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றனர். ஆனால் முடியவில்லை.

உடல் மீட்பு

உடனே சத்தி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு வீரர்கள் பங்களாப்புதூர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் வாய்க்காலில் இறங்கி நிஷாந்தை தேடினர். அப்போது நிஷாந்த் தண்ணீரில் மூழ்கிய இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் அவருடைய உடல் மீட்கப்பட்டது. அதன்பிறகு பிரேத பரிசோதனைக்காக உடல் சத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story