ஆரணியில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை


ஆரணியில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளை
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆரணியில் கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை

ஆரணி

கோவில் பூட்டை உடைத்து உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

ஆரணி ஒருங்கிணைந்த வி.ஏ.கே.நகர் பகுதியில் சக்தி விநாயகர் கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்ததும் வழக்கம் போல கோவிலை பூட்டிவிட்டு அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகிகள் சென்றனர். நேற்று காலை கோவிலை திறப்பதற்காக கோவிலின் தலைவர் கேசவன் வந்தபோது கருவறை அருகாமையில் இருந்த சில்வர் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததோடு அதில் இருந்த காணிக்கை பணமும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

இது குறித்து அவர் ஆரணி நகர போலீஸ் நிலையத்துக்கு தெரிவித்து புகார் அளித்தார். அதன்பேரில் ஆரணி நகர போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர்கள் சுந்தரேசன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் கோவிலுக்கு வந்து உண்டியல் உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து விசாரணை நடத்தினர்.

கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் கோவில் அருகாமையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களையும் பார்த்து குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உண்டியலில் மாதந்தோறும் 1-ந் தேதி திறந்து பணம் எடுத்து அதில் உள்ள பணத்தை எடுத்து பூஜை பொருட்கள், மின் கட்டணம் மற்றும் அர்ச்கருக்கு சம்பளம் ஆகியவற்றை வழங்கி மற்றவற்றை கோவில் கணக்கில் சேர்ப்பார்கள். இந்த கோவில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ள நிலையில் உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு கொள்ளை நடந்துள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு பஸ் அதிபர் வீட்டில் 22 பவுன் நகை கொள்ளை போய் உள்ளது. மேலும் ஆரணி - சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் சக்தி நகரில் உள்ள முத்தாலம்மன் கோவிலிலும் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவங்களில் குற்றவாளிகள் யாரும் இதுவரை பிடிபடவில்லை. தொடர் சம்பவங்களால் மக்கள் அதிர்வச்ி அடை்துள்ளனர்.


Next Story