ஆறுமுகமங்கலத்தில் 60 பயனாளிகளுக்கு கறவை மாடுகள்


ஆறுமுகமங்கலத்தில்  60 பயனாளிகளுக்கு கறவை மாடுகள்
x
தினத்தந்தி 29 Sept 2022 12:15 AM IST (Updated: 29 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஆறுமுகமங்கலத்தில் 60 பயனாளிகளுக்கு கறவை மாடுகளை என்.சின்னத்துரை வழங்கினார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், விவசாயிகளுக்கு கறவைமாடுகள் மற்றும் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் என். சின்னத்துரை தலைமை தாங்கி சங்க உறுப்பினர்கள் 60 பேருக்கு ரூ.33 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பிலான கறவை மாடுகள், விவசாய கடன் உதவியாக 2 பேருக்கு ரூ.6 லட்சம் கடன் உதவியையும் வழங்கி பேசினார். அப்போது, கூட்டுறவு கடன் சங்கத்தின் நடப்பு நிதியாண்டில் இதுவரை 390 உறுப்பினர்களுக்கு பயிர்கடன் மற்றும் நகைக்கடனாக ரூ.2.68 கோடி கடனாக வழங்கப்பட்டு உள்ளது. இதுவரை, விவசாயிகள் கடன் அட்டை கடன் திட்டத்தில் 35 உறுப்பினர்களுக்கு ரூ 55. 40 லட்சமும், விவசாய நகை கடனாக 116 உறுப்பினர்களுக்கு ரூ.2.54 கோடியும், வேளாண் கூட்டு பொறுப்பு குழு கடனாக 166 உறுப்பினர்களுக்கு ரூ.1.60 கோடியும், பொது நகைக்கடனாக 368 உறுப்பினர்களுக்கு ரூ.1.88 கோடியும், குறுகிய கால கடனாக ரூ.33.60 லட்சமும், மகளிர் சுய உதவி குழு கடனாக 8 குழுக்களுக்கு ரூ.9.08 லட்சமும், இதர கடனாக 84 உறுப்பினர்களுக்கு ரூ.10.31 லட்சமும் ஆக மொத்தம் இதுவரை 911 உறுப்பினர்களுக்கு ரூ.7 கோடியே 11 லட்சத்து 60 ஆயிரம் கடன் வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஸ்ரீவைகுண்டம் சரக மேற்பார்வையாளர் மு. மதியழகன், செயலாளர் மு. அய்யம்பாண்டி, மேலாளர் முத்துகிருஷ்ணகுமார், முதுநிலை எழுத்தர் ஆனந்தராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story