ஆசனூர் தங்கும் விடுதியில் மது அருந்த அனுமதித்த உரிமையாளர்கள் 2 பேர் கைது


ஆசனூர் தங்கும் விடுதியில் மது அருந்த அனுமதித்த உரிமையாளர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2023 2:34 AM IST (Updated: 22 Jun 2023 11:41 AM IST)
t-max-icont-min-icon

ஆசனூர் தங்கும் விடுதியில் மது அருந்த அனுமதித்த உரிமையாளர்கள் 2 பேர் கைது செய்யபட்டனா்

ஈரோடு

தாளவாடியை அடுத்த ஆசனூர் பகுதியில் ஏராளமான தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. விடுமுறை நாட்களில் இங்குள்ள விடுதிகளில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து தங்குவர்.

இந்த நிலையில் ஆசனூரில் உள்ள விடுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள 2 விடுதிகளில் அதன் உரிமையாளர்கள் மது அருந்த அனுமதி அளித்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விடுதிகளில் மது அருந்த அனுமதி அளித்ததாக மாவநத்தம் கிராமத்தை சேர்ந்த அரவிந்த்குமார் (வயது 21), தொட்டகாஜனூரை சேர்ந்த நாராயணன் (44) ஆகியோரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story