ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் இரு நாயன்மார்கள் குருபூஜை
ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் இரு நாயன்மார்கள் குருபூஜை நடந்தது.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
ஆத்தூர் சோமசுந்தரி அம்பாள் சமேத சோமநாத சுவாமி கோவிலில் சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் குருபூஜை நடைபெற்றது. இதைமுன்னிட்டு கோவிலில் உள்ள அறுபத்து மூவர் சன்னதியில் அமைந்துள்ள சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் கோவில் உட்பிரகார வீதி உலாவும், இரு நாயன்மார்கள் பற்றி சமய சொற்பொழிவும் நடைபெற்றது.
பின்னர் சேர்க்கை தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story