ஆத்தூரில் விவசாய தொழிலாளர்கள் போராட்டம்
ஆத்தூரில் விவசாய தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
ஆத்தூர் பேரூராட்சியில் நிறுத்தப்பட்ட நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கி மீண்டும் வேலையை தொடங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பாக நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
பேரூராட்சி அலுவலகம் முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் ரவீந்திரன், மாவட்ட தலைவர் முத்து, மாவட்ட பொருளாளர் பன்னீர்செல்வம் உட்பட விவசாய தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story