சத்யாநகர் அய்யாபதியில்திருவிளக்கு பூஜை
செம்மறிக்குளம் சத்யாநகர் அய்யாபதியில் திருவிளக்கு பூஜை நடந்தது.
தூத்துக்குடி
உடன்குடி:
செம்மறிகுளம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சத்யாநகரில் அய்யா பதியில் திருவிளக்கு பூஜை நடந்தது. நாட்டில் அனைவரும் அன்பு, பாசத்துடன் ஒற்றுமையாக வாழ வேண்டியும், கன மழை பொழிந்து பூமி செழிக்கவும் வழிபாடு நடத்தப்பட்டது. இதில் இந்து அன்னையர் முன்னணி தலைவி தங்கச்செல்வி வரவேற்றுப் பேசினார், இந்து அன்னையர் முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் கேசவன் கலந்து கொண்டு ராமாயணம் மகாபாரதம் பற்றி பேசினார். போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு இந்து முன்னணி பொறுப்பாளர் சதீஷ்குமார் பரிசுகள் வழங்கினார். இதில் இந்து அன்னையர் முன்னணி துணைத் தலைவி அன்னபுஷ்பம், செயலாளர் மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர் முத்துக்குமார்மற்றும் பொறுப்பாளர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்,
Related Tags :
Next Story