சீனாபுரம் சந்தையில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ரூ.48 ஆயிரத்துக்கு விற்பனை


சீனாபுரம் சந்தையில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ரூ.48 ஆயிரத்துக்கு விற்பனை
x

சீனாபுரம் சந்தையில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ரூ.48 ஆயிரத்துக்கு விற்பனையானது.

ஈரோடு

பெருந்துறை

சீனாபுரம் சந்தையில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ரூ.48 ஆயிரத்துக்கு விற்பனையானது.

கால்நடைசந்தை

பெருந்துறை அருகே உள்ள சீனாபுரத்தில் நேற்று கால்நடை சந்தை நடைபெற்றது.

சேலம் மாவட்டம் முத்த நாயக்கன்பட்டி, தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, மோர்பாளையம் மற்றும் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறை, அறச்சலூர், சென்னிமலை, நசியனூர், பவானி உள்ளிட்ட ஊர்களில் இருந்து விர்ஜின் கலப்பின கறவை மாடுகள் 120-ம், இதே இன கிடாரிக் கன்றுகள் 100-ம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன.

சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடுகள் 120-ம், இதே வகை கிடாரிக்கன்றுகள் 175-ம் விற்பனைக்கு வந்திருந்தன.

ரூ.1½ கோடிக்கு...

சந்தையில் விர்ஜின் கலப்பின கறவை மாடு ஒன்று ரூ.40 ஆயிரம் முதல் ரூ.48 ஆயிரம் வரை விற்றது. இதே இன முதல் ஈற்றுக்கு தயாராகவுள்ள கிடாரி கன்று ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை விற்பனையானது.

சிந்து மற்றும் ஜெர்சி வகை கறவை மாடுகள் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.37 ஆயிரம் வரையும், கிடாரி கன்று ஒன்று ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.23 ஆயிரம் வரையும் விற்றது.

நேற்றைய சந்தையில் ரூ.1½ கோடிக்கு மாடுகள் விற்பனை நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அறச்சலூர், மொடக்குறிச்சி, ஊஞ்சலூர், கொடுமுடி, சென்னிமலை, காஞ்சிக்கோவில், திங்களூர் மற்றும் திருப்பூர், ஊத்துக்குளி, குன்னத்தூர், பல்லக்கவுண்டன் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை வாங்கி சென்றனர்.


Next Story