ஏமகண்டனூரில்ஆட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர மகா உற்சவம்இன்று தொடங்குகிறது


ஏமகண்டனூரில்ஆட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர மகா உற்சவம்இன்று தொடங்குகிறது
x

ஏமகண்டனூரில் ஆட்சி அம்மன் கோவிலில் ஆடிப்பூர மகா உற்சவம் இன்று தொடங்கி நடைபெறுகிறது

ஈரோடு

கொடுமுடி ஏமகண்டனூரில் பிரசித்தி பெற்ற ஆட்சி அம்மன் கோவில் உள்ளது. மேலும் இந்த கோவிலில் சித்திரகுப்த, சந்திரகுப்த சமேத எமதர்மராஜாவுக்கு தனி சன்னதியும் உள்ளது. இந்த கோவிலில் 12-ம் ஆண்டு ஆடிப்பூர மகா உற்சவம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 7.30 மணிக்கு மங்கள இசை மற்றும் கணபதி யாகத்துடன் தொடங்குகிறது. இதைத்தொடர்ந்து ஸ்ரீவித்யாக்ரம ஆபரண பூஜை மற்றும் மகாயாகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. மாலை 3 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியும், 6 மணிக்கு ஸ்ரீதேவி மகாத்மியம் 700 ஸ்லோகங்கள் பாராயணமும், ஸ்ரீ சதுஷ்சஷ்டி யோகினி பைரவ பைரவி பலி பூஜையும், மகா தீபாராதனை நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) காலை 9 மணிக்கு மங்கள இசையுடன் ஸ்ரீ மகா சண்டி ஹோமம், வடுக பூஜை, கன்னியா பூஜை, சுமங்கலி பூஜை, சுகாசினி பூஜை, தம்பதி பூஜை, கோ பூஜை, ஸ்ரீ அஸ்வா பூஜை மற்றும் ஸ்ரீ கஜா பூஜைகள் நடைபெறுகின்றன. 3 மணிக்கு மேல் ஸ்ரீ மங்கல மகா சண்டி ஹோமத்தின் மகாபூர்ணாகுதி நடக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீமதி ராணி பூர்ணாம்பாள் தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.


Next Story