ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில்  சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஈரோடு

தமிழக அரசு சார்பில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலமாக நிறைவேற்ற வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், வரையறுக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் பழனியம்மாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாநில துணை பொதுச்செயலாளர் சீனிவாசன், மாவட்ட செயலாளர் விஜயமனோகரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள். இதில் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள்.


Next Story