ஈரோடு கே.கே.நகர் ரெயில்வே நுழைவுபாலத்தில்பராமரிப்பு பணி முடிந்து போக்குவரத்து தொடக்கம்


ஈரோடு கே.கே.நகர் ரெயில்வே நுழைவுபாலத்தில்பராமரிப்பு பணி முடிந்து போக்குவரத்து தொடக்கம்
x

ஈரோடு கே.கே.நகர் ரெயில்வே நுழைவுபாலத்தில் பராமரிப்பு பணி முடிந்து போக்குவரத்து தொடங்கியது.

ஈரோடு

ஈரோடு ரெயில் நிலையத்துக்கும், தொட்டிபாளையம் ரெயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் கே.கே.நகர் ரெயில்வே நுழைவு பாலம் அமைந்துள்ளது. ஈரோடு- சென்னிமலை ரோட்டின் குறுக்கே இந்த ரெயில்வே நுழைவுபாலம் உள்ளது. இந்த பாலத்தில் பராமரிப்பு பணிகள் செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து கடந்த மார்ச் மாதம் 30-ந்தேதி பணிகள் தொடங்கியது.

இதையொட்டி கே.கே.நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் தொடர்பான எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது. மேலும் பாலத்தின் அடியில் வாகனங்கள் செல்ல முடியாதபடி தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, வாகனங்கள் மாற்றுப்பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்தநிலையில் கே.கே.நகர் ரெயில்வே நுழைவு பாலத்தில் பராமரிப்பு பணிகள் முடிந்து தற்போது போக்குவரத்து தொடங்கி உள்ளது. இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து சென்னிமலை செல்லும் வாகன ஓட்டிகள் சிரமமின்றி சென்றனர்.


Next Story