ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுன்டர்களை கூடுதலாக திறக்க வேண்டும்; தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கு மனு
ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுன்டர்களை கூடுதலாக திறக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.
ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுன்டர்களை கூடுதலாக திறக்க வேண்டும் என்று தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பப்பட்டு உள்ளது.
டிக்கெட் கவுன்டர்கள்
தென்னக ரெயில்வேயின் முன்னாள் ஆலோசனைக்குழு உறுப்பினர் பாஷா, தென்னக ரெயில்வே நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பி உள்ளார். அந்த மனுவில் அவர் கூறி இருப்பதாவது:-
ஈரோடு ரெயில் நிலையத்தில் மொத்தம் 4 பிளாட்பாரங்கள் உள்ளன. தினசரி 100-க்கும் மேற்பட்ட ரெயில்கள் ஈரோடு ரெயில் நிலையம் வழியாக வந்து செல்கின்றன. இந்த ரெயில்களில் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர்.
நீண்ட நேரம் காத்திருப்பு
இந்த நிலையில், ஈரோடு ரெயில் நிலையத்தின் நுழைவு வாயில் பகுதியில் 2 முன்பதிவு கவுன்டர்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்தது. தற்போது, ஒரே ஒரு முன்பதிவு கவுன்டர் மட்டுமே செயல்படுகிறது.
தீபாவளி பண்டிகை நேர காலத்தில் முன்பதிவு செய்ய வெளியூர்களில் இருந்து வந்தவர்கள், முன்பதிவு ரத்து செய்பவர்கள் கூட்டம் தினம் தினம் அதிகரித்து கொண்டுள்ளதால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து அவதியடைந்து வருகின்றனர். மேலும், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் பண்டிகை வர உள்ளதால் பயணிகளின் சிரமத்தை தவிர்க்க, கூடுதல் முன்பதிவு டிக்கெட் கவுன்டர்களை உடனடியாக திறக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி உள்ளார்.