ஈரோடு ரெயில் நிலையத்தில்செயல்படாத பொருட்கள் பாதுகாப்பு அறைபயணிகள் தவிப்பு
ஈரோடு ரெயில் நிலையத்தில் செயல்படாத பொருட்கள் பாதுகாப்பு அறையால் பயணிகள் தவிக்கின்றனா்.
ஈரோடு
ஈரோடு ரெயில் நிலைய வளாகத்தில் பயணிகளின் வசதிக்காக பொருட்கள் பாதுகாப்பு அறை அமைக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள லாக்கரில் பொருட்களை வைத்துவிட்டு, பிறகு வந்து தங்களது பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். இதற்காக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக இந்த அறை அடைக்கப்பட்டு உள்ளதால் பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். பொருட்கள் பாதுகாப்பு அறை தனியாருக்கு ஏலம் விடப்படுவதாகவும், ஏற்கனவே எடுத்தவரின் ஏலத்துக்கான காலஅவகாசம் முடிந்துவிட்டதாகவும், புதிதாக ஏலம் விடப்பட்ட பிறகு மீண்டும் பாதுகாப்பு அறை திறக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story