ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.7,233-க்கு ஏலம்


ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.7,233-க்கு ஏலம்
x

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மஞ்சள் குவிண்டால் ரூ.7,233-க்கு ஏலம் போனது.

ஈரோடு

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் மஞ்சள் குவிண்டால் ஒன்று ரூ.7 ஆயிரத்து 233-க்கு ஏலம் போனது.

விரலி மஞ்சள்

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மற்றும் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடம், கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடம் ஆகிய 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை தினங்களை தவிர மற்ற நாட்களில் இங்கு மஞ்சள் ஏலம் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்துக்கு 4 ஆயிரத்து 730 மூட்டைகளில் விவசாயிகள் மஞ்சளை கொண்டு வந்திருந்தார்கள். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ரூ.5 ஆயிரத்து 711 முதல் ரூ.7 ஆயிரத்து 233 வரைக்கும், கிழங்கு மஞ்சள் ரூ.5 ஆயிரத்து 189 முதல் ரூ.6 ஆயிரத்து 329-க்கும் ஏலம் போனது.

கூட்டுறவு சங்கம்

பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நடந்த ஏலத்துக்கு 1,353 மூட்டைகள் கொண்டு வரப்பட்டன. இதில் விரலி மஞ்சள் ரூ.5 ஆயிரத்து 355 முதல் ரூ.7 ஆயிரத்து 191-வரைக்கும், கிழங்கு மஞ்சள் ரூ.5 ஆயிரத்து 9 முதல் ரூ.6 ஆயிரத்து 709 வரைக்கும் ஏலம் போனது.

இதே போல் ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்துக்கு 1,267 மூட்டைகளில் மஞ்சள் கொண்டு வரப்பட்டன. இதில் விரலி மஞ்சள் ரூ.5 ஆயிரத்து 861 முதல் ரூ.7 ஆயிரத்து 233 வரைக்கும், கிழங்கு மஞ்சள் ரூ.5 ஆயிரத்து 319 முதல் ரூ.6 ஆயிரத்து 419-வரைக்கும் ஏலம் போனது. கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்துக்கு 203 மூட்டைகளில் மஞ்சள் கொண்டு வரப்பட்டன. இதில் விரலி மஞ்சள் ரூ.5 ஆயிரத்து 369 முதல் ரூ.7 ஆயிரத்து 140-க்கும், கிழங்கு மஞ்சள் ரூ.4 ஆயிரத்து 905 முதல் ரூ.6 ஆயிரத்து 210 வரைக்கும் ஏலம் போனது. ஈரோடு மஞ்சள் மார்க்கெட்டுகளுக்கு மொத்தம் 7 ஆயிரத்து 553 மூட்டைகளில் மஞ்சள் கொண்டு வரப்பட்டதில் 4 ஆயிரத்து 960 மூட்டைகள் விற்பனை ஆனது. மஞ்சள் விலை குறைந்து விற்பனை ஆனதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story