ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்தில்டி.ஜி.பி. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு
. சைலேந்திரபாபு திடீர் ஆய்வு
கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் புலம் பெயர்ந்து வந்துள்ள தொழிலாளர்களை சந்தித்து பேசுவதற்காக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று முன்தினம் கோவை வந்தார். பின்னர் அவர் திருப்பூர் வந்து, புலம் பெயர்ந்த தொழிலாளர்களை சந்தித்துவிட்டு, அந்த மாவட்டத்தில் சில போலீஸ் நிலையங்களை ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு ஈரோட்டுக்கு வந்தார். பின்னர் அவர் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு சென்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் போலீஸ் நிலையத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள், நேற்று முன்தினம் நிகழ்வு குறித்த விவர குறிப்புகளை ஆய்வு செய்தார். பின்னர் போலீஸ் நிலையத்தை தூய்மையாக வைத்திருப்பதாக கூறி, பணியில் இருந்தவர்களுக்கு டி.ஜி.பி. பரிசும், வெகுமதியும் வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் ரெயில் மூலம் சென்னை புறப்பட்டு சென்றார். இந்த ஆய்வின்போது அவருடன், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆறுமுகம், டவுன் கிரைம் இன்ஸ்பெக்டர் முருகன் ஆகியோர் இருந்தனர்.