ஈரோட்டில்தொழிலாளியை தாக்கி செல்போன் பறித்த 6 பேர் கைது


ஈரோட்டில்தொழிலாளியை தாக்கி செல்போன் பறித்த 6 பேர் கைது
x

ஈரோட்டில் தொழிலாளியை தாக்கி செல்போன் பறித்த 6 பேரை போலீசாா் கைது செய்தனா்.

ஈரோடு

ஈரோட்டில் தொழிலாளியை தாக்கி செல்ேபான் பறித்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

செல்போன் பறிப்பு

மேற்குவங்காள மாநிலம் மெக்னிபூர் பகுதியை சேர்ந்தவர் ரகிம்ஷா (வயது 36). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் தனது நண்பருடன் ஈரோடு சத்திரோடு ஞானபுரம் பகுதியில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அப்போது அங்கு 6 பேர் கொண்ட கும்பல் மது அருந்தி கொண்டு இருந்தது. ரகிம்ஷாவின் செல்போன் தவறி கீழே விழுந்தது. அந்த செல்போனை மது அருந்தி கொண்டிருந்த கும்பலில் இருந்து ஒருவர் எடுத்து கொண்டார். அவரிடம் செல்போனை கேட்டபோது ரகிம்ஷாவை தாக்க தொடங்கினார். பிறகு 6 பேரும் சேர்ந்து ரகிம்ஷாவை தகாத வார்த்தையால் பேசி தாக்கிவிட்டு செல்போனுடன் அங்கிருந்து தப்பி சென்றனர்.

கைது

இதுகுறித்து ரகிம்ஷா கொடுத்த புகாரின்பேரில் வீரப்பன்சத்திரம் போலீசார் விசாரணை நடத்தினா். விசாரணையில் செல்போனை பறித்து சென்றது, எல்லப்பாளையம் ஆயப்பாளியை சேர்ந்த ராமசாமியின் மகன் சந்தோஷ் (26), சுப்பிரமணியின் மகன் கிருஷ்ணமூர்த்தி (24), ஈரோடு காளைமாட்டு சிலை பகுதியை சேர்ந்த முஸ்தபாவின் மகன் அஜித்குமார் (24), அழகர்சாமியின் மகன் பரத் (20), சுப்பிரமணியின் மகன் குணசேகரன் (25), சென்னிமலை ரோடு பகுதியை சேர்ந்த பழனிசாமியின் மகன் ஜெகதீஷ் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்துது அவர்கள் 6 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.


Next Story