ஈரோட்டில் குடிபோதையில் கீழே விழுந்த வாலிபர் சாவு
ஈரோட்டில் குடிபோதையில் கீழே விழுந்த வாலிபர் இறந்தாா்
ஈரோடு
ஈரோடு சூரம்பட்டி பஸ் நிலையம் அருகே சம்பவத்தன்று 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் குடிபோதையில் கீழே விழுந்து பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் கடந்த 17-ந்தேதி இறந்தார். இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர் ? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story