ஈரோட்டில் விவசாயம்-பால் உற்பத்தி கண்காட்சி


ஈரோட்டில்  விவசாயம்-பால் உற்பத்தி கண்காட்சி
x

ஈரோட்டில் விவசாயம் மற்றும் பால் உற்பத்தி கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

ஈரோடு

ஈரோட்டில் விவசாயம் மற்றும் பால் உற்பத்தி கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

விவசாய கண்காட்சி

யுனைட்டட் டிரேட் பேர்ஸ் இந்தியா நிறுவனம் சார்பில், ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள பரிமளம் மகாலில் 6-வது ஆண்டாக விவசாயம் மற்றும் பால் உற்பத்தி கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. விழாவில் ஈரோடு வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி கலந்து கொண்டு, கண்காட்சியை ரிப்பன் வெட்டி திறந்து வைக்கிறார்.

விழாவில் ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் குடோன் உரிமையாளர்கள் சங்க தலைவர் கே.வி.ரவிசங்கர், செயலாளர் எம்.சத்தியமூர்த்தி, பொருளாளர் ஏ.மணிவண்ணன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் மரகதமணி, வேளாண்மை துணை இயக்குனர் சாவித்திரி, கவுந்தப்பாடி பலராமர் அக்ரி பார்ம்ஸ் புருடியுசர் நிறுவனத்தின் தலைவர் வேலப்பன், பொய்கை உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பூமதி, பாரதி பொன்னுசாமி, பொன்னுசாமி, நந்திவர்மன், வேலுச்சாமி, பெரியவேலப்பன், முன்னோடி விவசாயி பரிமளம் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

விதை -உரங்கள்

இதுகுறித்து யுனைட்டட் டிரேட் பேர்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாகி பாக்கியராஜ் கூறும்போது, 'இந்த கண்காட்சியில் வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப அறைகள், பவர் டில்லர்கள், சோலார் மோட்டார்கள், பம்புகள், பைப்கள், சொட்டுநீர் பாசன அமைப்பு, அறுவடை எந்திரம் உள்பட பல்வேறு வேளாண்மை சார்ந்த தொழில்நுட்ப சாதனங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன.

மேலும் இயற்கை உரம், மைனர் சிறு தானிய வேளாண்மை, தோட்டக்கலை புத்தகங்கள் போன்ற தொழில்நுட்பமல்லாத பொருட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. பம்புகள், விளக்குகள், மோட்டார்கள் போன்ற சோலார் பொருட்களும், விதைகள், உரங்கள் என அனைத்தும் இடம்பெறுகின்றன. கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம். மேலும் விவரங்களுக்கு 9360093603, 8668008056 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்' என்றார்.


Related Tags :
Next Story