ஈரோட்டில் பண்ணை வீட்டில் சூதாட்டம்; 18 பேர் கைது ரூ.3 லட்சம்-3 சொகுசு கார்கள் பறிமுதல்


ஈரோட்டில்   பண்ணை வீட்டில் சூதாட்டம்; 18 பேர் கைது  ரூ.3 லட்சம்-3 சொகுசு கார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Sept 2022 1:00 AM IST (Updated: 22 Sept 2022 1:00 AM IST)
t-max-icont-min-icon

ரூ.3 லட்சம்-3 சொகுசு கார்கள் பறிமுதல்

ஈரோடு

ஈரோடு கருங்கல்பாளையம் சாய்குரு நகரில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக கருங்கல்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று முன்தினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜபிரபு தலைமையில் போலீசார் அங்கு சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள். அங்குள்ள ஒரு பண்ணை வீட்டில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டம் நடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்குள்ளவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் 18 பேர் கொண்ட கும்பல் சூதாட்டம் விளையாடிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 18 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து ரூ.3 லட்சத்து 16 ஆயிரம், 3 சொகுசு கார்கள், 4 மோட்டார் சைக்கிள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story