ஈரோட்டில்ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி;போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வியாபாரி மனு


ஈரோட்டில்ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி;போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வியாபாரி மனு
x

ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வியாபாரி மனு கொடுத்தார்.

ஈரோடு

ஏலச்சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் வியாபாரி மனு கொடுத்தார்.

ஏலச்சீட்டு

ஈரோடு வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்த காய்கறி வியாபாரியான திருமூர்த்தி (வயது 62) என்பவர், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று கொடுத்திருந்த புகார் மனுவில் கூறி இருந்ததாவது:-

வியாபார அடிப்படையில் ஊஞ்சபாளையத்தை சேர்ந்த ஒருவர் எனக்கு அறிமுகம் ஆனார். அவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு என்னை அணுகி, ஏலச்சீட்டு நடத்த இருப்பதாகவும், அதற்கு நான் எனது நண்பர்கள், வியாபாரிகள் மற்றும் உறவினர்கள் ஆகியோரை ஏலச்சீட்டில் சேர்த்து விட வேண்டும் என்றும் கூறினார்.

அதன்பேரில் என்னுடைய நண்பர்கள், உறவினர் மற்றும் வியாபாரிகள் ஆகியோரிடம் ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.20 லட்சம் சீட்டு என 5 வகையான சீட்டுகளில் தலா 20 பேர்களை சேர்த்து விட்டேன். மேலும் மேற்படி 5 வகை ஏல சீட்டுகளிலும் நானும் தலா ஒரு சீட்டு போட்டு வந்தேன்.

ரூ.2 கோடி மோசடி

நாங்கள் தொடர்ந்து உரிய நேரத்தில் சீட்டுக்கான தொகையை அவரிடம் செலுத்தி வந்தோம். இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்து ஏல சீட்டுகளும் முடிவடைந்துவிட்டது. ஏல சீட்டு போட்ட எனக்கும், மற்றவர்களுக்கும் ரூ.2 கோடியே 20 லட்சம் பணம் கொடுக்க வேண்டும். இதற்கிடையில் கடந்த 2019-ம் ஆண்டு ரூ.23 லட்சம் மட்டும் அவர் எங்களுக்கு கொடுத்தார்.

மீதி தொகை ரூ.1 கோடியே 97 லட்சத்தை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 2-ந்தேதி அவரிடம் பணம் கேட்க சென்றபோது அவருடைய மனைவி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். எனவே எங்களுக்கு பணம் தராமல் மோசடி செய்த நபர் மீதும், அவருடைய மனைவி மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை திருப்பி தர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.


Related Tags :
Next Story