ஈரோட்டில்மாதுளை விலை குறைந்து கிலோ ரூ.120-க்கு விற்பனை


ஈரோட்டில்மாதுளை விலை குறைந்து கிலோ ரூ.120-க்கு விற்பனை
x

ஈரோட்டில் மாதுளை விலை குறைந்து கிலோ ரூ.120-க்கு விற்பனையானது

ஈரோடு

ஆரோக்கிய உணவுகள் பட்டியலில் முதல் இடத்தில் பழங்கள் உள்ளன. சமீபகாலமாக அனைத்து பொருட்களின் விலைகளும் உயர்ந்ததுபோல பழங்களின் விலையும் உயர்ந்தது. ஏழைகள் பழங்கள் வாங்க முடியாத அளவுக்கு விலை உயர்ந்தன இந்த நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.250 வரை விற்பனையான மாதுளை விலை அதிரடியாக குறைந்து உள்ளது. ஈரோட்டில் நேற்று மாதுளை கிலோ ஒன்று ரூ.100 மற்றும் ரூ.120 வரை விற்பனை ஆனது.

இதுபற்றி வியாபாரி ஒருவர் கூறும்போது, 'தற்போது மராட்டியம், கர்நாடக மாநிலங்களில் இருந்து மாதுளை வரத்து தொடங்கி உள்ளது. இதனால் விலை குறைந்திருக்கிறது' என்றார். ஆனால் ஆப்பிள் உள்ளிட்ட பழங்கள் விலையில் மாற்றம் இல்லை.

நேற்று ஈரோட்டில் பழங்கள் விலை விவரம் வருமாறு:-

ஆப்பிள் (கிலோ) -ரூ.250, ஆரஞ்சு (ஆஸ்திரேலியா) -ரூ.220, கமலா ஆரஞ்சு -ரூ.120, சாத்துக்குடி -ரூ.80, பன்னீர் திராட்சை -ரூ.160, பிளம்ஸ் -ரூ.240.


Next Story