ஈரோட்டில் மணமகள் அலங்காரத்தில் திருநங்கைகளின் ஆடை அணிவகுப்பு
ஈரோட்டில் மணமகள் அலங்காரத்தில் திருநங்கைகளின் ஆடை அணிவகுப்பு நடந்தது.
உலக சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக மணமகள் அலங்காரத்தில் திருநங்கைகளின் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி ஈரோட்டில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 50 திருநங்கைகள் பங்கேற்றனர். அவர்களுக்கு மணமகள் அலங்காரம் செய்வதற்கு 2 மணிநேர அவகாசம் கொடுக்கப்பட்டது. அதற்குள் திருநங்கைகள் மணப்பெண் அலங்காரம் செய்து கொண்டார்கள். இதைத்தொடர்ந்து திருநங்கைகளின் ஆடை அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக அமைக்கப்பட்டு இருந்த மேடையில் திருநங்கைகள் ஒவ்வொருவராக ஒய்யாரமாக நடந்து வந்து போஸ் கொடுத்தார்கள். அப்போது சுற்றிலும் அமர்ந்து இருந்தவர்கள் கரவோசை எழுப்பி உற்சாகப்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக சினிமா இயக்குனர் அசாருதீன், நடிகர்கள் கவுதம், ரபி உள்ளிட்டோர் செயல்பட்டனர்.
இதில் சிறப்பாக திறமையை வெளிக்காட்டிய 15 திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெய்சாரதி தெரிவித்தார்.