ஈரோட்டில் மஞ்சள் குவிண்டால் ரூ.15 ஆயிரத்தை நெருங்கியதுதொடர் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி


ஈரோட்டில் மஞ்சள் குவிண்டால் ரூ.15 ஆயிரத்தை நெருங்கியதுதொடர் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி
x

ஈரோட்டில் மஞ்சள் குவிண்டால் ரூ.15 ஆயிரத்தை நெருங்கியதுதொடர் விலை உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

ஈரோடு

ஈரோட்டில் மஞ்சள் குவிண்டால் ரூ.15 ஆயிரத்தை நெருங்கியது. மஞ்சள் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்ந்து விலை உயர்வு

தமிழகத்திலேயே ஈரோடு மாவட்டத்தில் தான் அதிகப்படியான மஞ்சள் விளைவிக்கப்படுகிறது. சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களை தவிர மற்ற நாட்களில் மாவட்டத்தில் 4 இடங்களில் மஞ்சள் ஏலம் நடந்து வருகிறது. ஈரோடு மார்க்கெட்டுகளுக்கு தரமான மஞ்சள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவதால் தொடர்ந்து விலை உயர்ந்து வருகிறது.

கடந்த 14-ந்தேதி நடந்த ஏலத்தில் மஞ்சள் ஒரு குவிண்டால் அதிகபட்சமாக ரூ.10 ஆயிரத்து 500-க்கு விற்பனை ஆனது. இந்த நிலையில் நேற்று நடந்த ஏலத்தில் ஒரு குவிண்டால் மஞ்சள் ரூ.14 ஆயிரத்து 899-க்கு விற்பனை ஆனது. அதாவது ஒரே வாரத்தில் குவிண்டாலுக்கு ரூ.4 ஆயிரத்து 399 வரை உயர்ந்துள்ளது.

ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்

பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்கூடத்துக்கு நேற்று 1,545 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.9 ஆயிரத்து 523-க்கும், அதிகபட்சமாக ரூ.14 ஆயிரத்து 9-க்கும், கிழங்கு மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 909-க்கும், அதிகபட்சமாக ரூ.13 ஆயிரத்து 9-க்கும் விற்பனை ஆனது. மொத்தம் 1,307 மஞ்சள் மூட்டைகள் ஏலம் போனது.

ஈரோடு ஒழுங்குமுறை விற்பனைகூடத்துக்கு 4 ஆயிரத்து 95 மஞ்சள் மூட்டைகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.

இதில் விரலி மஞ்சள் குவிண்டால் குறைந்தபட்சமாக ரூ.9 ஆயிரத்து 599-க்கும், அதிகபட்சமாக ரூ.14 ஆயிரத்து 369-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.8 ஆயிரத்து 529-க்கும், அதிகபட்சமாக ரூ.13 ஆயிரத்து 399-க்கும் விற்பனை செய்யப்பட்டன. 1,809 மஞ்சள் மூட்டைகள் விற்பனை ஆனது.

ரூ.14,899-க்கு விற்பனை

ஈரோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை கூடத்துக்கு 2 ஆயிரத்து 49 மஞ்சள் மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதில் விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.9 ஆயிரத்து 466-க்கும், அதிகபட்சமாக ரூ.14 ஆயிரத்து 569-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.9 ஆயிரத்து 89-க்கும், அதிகபட்சமாக ரூ.13 ஆயிரத்து 299-க்கும் விற்கப்பட்டன. மொத்தம் 1,784 மூட்டை மஞ்சள் ஏலம் போனது.

கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்துக்கு 75 மஞ்சள் மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. விரலி மஞ்சள் குவிண்டால் ஒன்று குறைந்தபட்சமாக ரூ.10 ஆயிரத்து 259-க்கும், அதிகபட்சமாக ரூ.14 ஆயிரத்து 899-க்கும், கிழங்கு மஞ்சள் குறைந்தபட்சமாக ரூ.12 ஆயிரத்து 6-க்கும், அதிகபட்சமாக ரூ.13 ஆயிரத்து 799-க்கும் ஏலம் போனது. 70 மூட்டை மஞ்சள் விற்கப்பட்டன.

மஞ்சள் விலை குவிண்டாலுக்கு ரூ.15 ஆயிரத்தை நெருங்கியதுடன், தொடர்ந்து உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story