ஈரோட்டில் 3½ கிலோ கஞ்சா பதுக்கிய பெண் கைது
கஞ்சா பதுக்கிய பெண்
ஈரோடு
ஈரோடு கொல்லம்பாளையம் பார்வதி கிருஷ்ணாவீதியில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக ஈரோடு மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதாலட்சுமி தலைமையிலான போலீசாரும், சூரம்பட்டி போலீசாரும் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்குள்ள ஒரு வீட்டில் கஞ்சா பொட்டலங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக அதே பகுதியை சேர்ந்த செல்வி (வயது 48) என்பவரை சூரம்பட்டி போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3½ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
Related Tags :
Next Story