எட்டயபுரம் பஜாரில்கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது


எட்டயபுரம் பஜாரில்கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

எட்டயபுரம் பஜாரில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது

தூத்துக்குடி

எட்டயபுரம்:

எட்டயபுரத்தில் கடந்த சில மாதங்களாக திருட்டு மற்றும் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து நகை வியாபார கூட்டமைப்பும், வர்த்தகர் சங்கமும் இணைந்து எட்டயபுரம் மெயின் பஜாரில் புதிதாக 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி உள்ளனர். இந்த கேமராக்களை இயக்கி வைக்கும் நிகழ்ச்சி எட்டயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா குப்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காணிப்பு கேமராக்களை இயக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு வர்த்தக சங்கத்தலைவர் ராஜா முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் பேரூராட்சி நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜின்னா பீர்முகமது வர்த்தக சங்க ஆலோசகர் வெங்கடசுப்பிரமணியன், வர்த்தக சங்க பொருளாளர் பரமசிவன், வர்த்தக சங்கத் துணைத் தலைவர் வெங்கடேஷ் ராஜா மற்றும் நகை வியாபாரிகள் கூட்டமைப்பினர் உள்பட வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story