கயத்தாறு தாலுகா அலுவலகத்தில்சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்


கயத்தாறு தாலுகா அலுவலகத்தில்சமாதான பேச்சுவார்த்தை கூட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2023 12:15 AM IST (Updated: 7 Feb 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சிதம்பரம்பட்டி மாணவர்கள் மோதல் விவகாரம் தொடர்பாக கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு தாலுகா சிதம்பரம்பட்டி கிராமத்தில் பஞ்சாயத்து யூனியன் உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த மாதம் இருதரப்பு மாணவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த பின்னணியில் மாணவர்கள், பெற்றோர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடம் செல்லாமல் வகுப்புகளை புறக்கணித்தனர். இந்த நிலையில் பள்ளி ஆசிரியர் ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து ஒரு தரப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று கயத்தாறு தாலுகா அலுவலகத்தில் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, கோவில்பட்டி கோட்ட கல்வி அலுவலர் ஜெபராஜ், கயத்தா று தாசில்தார் சுப்புலட்சுமி, நாலாட்டின்புத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் ஆர்தர் மற்றும் இரு தரப்பைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தையில், சிதம்பரம்பட்டி பள்ளியிலிருந்து மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியரை மீண்டும் பணியில் அமர்த்த முடியாது என்றும், அதற்கு வேறு ஆசிரியை உடனடியாக நியமிக்கப்படுவார் என்றும், பள்ளி மாணவ, மாணவிகள் வழக்கம் போல் பள்ளிக்கு வந்து செல்ல பெற்்றோரை கேட்டு் கொள்ளப்பட்டது.


Next Story