பெருந்துறையில் மளிகை-பேக்கரி கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது


பெருந்துறையில் மளிகை-பேக்கரி கடைகளில்  தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
x

2 பேர் கைது

ஈரோடு

பெருந்துறை ஈரோடு ரோடு மற்றும் கோவை ரோடு ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் மளிகைக் கடை மற்றும் ஒரு பேக்கரி கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக பெருந்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மசூதாபேகம், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் போலீசாருடன் ஈரோடு ரோட்டில் உள்ள மளிகை கடைக்கு சென்று சோதனை செய்தனர்.

இதில் அங்கு தடை செய்யப்பட்ட 10 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து விற்பனைக்கு வைத்திருந்ததாக அந்த கடையின் உரிமையாளர் பரமசிவம் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பெருந்துறை கோவை ரோட்டில் இயங்கி வரும் பேக்கரி கடை ஒன்றை போலீசார் சோதனை செய்தபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 10 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்கள் பிடிபட்டன. இதையடுத்து, அந்த கடையின் உரிமையாளர் ராஜேஸ்குமார் (24) என்பவரை போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


Next Story