கழுகுமலை பள்ளியில் திருவள்ளுவர் கழக கூட்டம்

கழுகுமலை பள்ளியில் திருவள்ளுவர் கழக கூட்டம் நடந்தது.
தூத்துக்குடி
நாலாட்டின்புத்தூர்:
கழுகுமலையில் விமல் மழலையர் தொடக்க பள்ளியில் திருவள்ளுவர் கழக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காமநாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மணிமதி தலைமை தாங்கினார். கழுகுமலை சைவ பேரவை அருணாசிதம்பரம் முன்னிலை வகித்தார். முத்துலட்சுமி வரவேற்றார். கோவில்பட்டி அர்ச்சனா சிறப்புரையாற்றினார். தொடர்ந்து கல்வி என்ற தலைப்பில் அனுசுயா, கருப்பசாமி, மகாஹரிணி ஆகியோர் பேசினர். கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்கணேஷ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இசக்கியம்மாள் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கழுகுமலை திருவள்ளுவர் கழக தலைவர் பொன்ராஜ் பாண்டியன், செயலாளர் முருகன், பொருளாளர் சிவராமன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story






