கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பெண்கள் சிக்கினர்


கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில்  மூதாட்டியிடம் நகை பறித்த 2 பெண்கள் சிக்கினர்
x
தினத்தந்தி 14 Oct 2022 12:15 AM IST (Updated: 14 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த 2 பெண்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை தாலுகா பாண்டூர் கிராமத்தை சேர்ந்தவர் மனோகரன் மனைவி செல்வி (வயது 65). இவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்ப்பதற்காக வந்தார். பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உறவினரை பார்த்துவிட்டு செல்வி தனது அக்காள் கல்யாணி, உறவினர் அன்னபூரணி உட்பட 5 பேருடன் உளுந்தூர்பேட்டை செல்வதற்காக கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்துக்கு வந்தார்.

தொடர்ந்து உளுந்தூர்பேட்டை செல்லும் பஸ்சில் செல்வி ஏறினார். அப்போது அங்கிருந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி 2 பெண்கள் செல்வியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடினர்.

போலீசார் விசாரணை

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த செல்வி, அருகில் இருந்தவர்கள் உதவியுடன் அந்த 2 பெண்களையும் மடக்கிப்பிடித்து கள்ளக்குறிச்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story