கள்ளக்குறிச்சியில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்


கள்ளக்குறிச்சியில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 April 2023 12:15 AM IST (Updated: 18 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காலமுறை ஊதியம் வழங்கக்கோரி கள்ளக்குறிச்சியில் சத்துணவு ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாவட்ட தலைவர் வேலு தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் சுலைமான், பழனிவேல், ஒன்றிய தலைவர்கள் ராஜகுமாரி, முத்துலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். பணிக்கொடையாக பொறுப்பாளருக்கு ரூ.5 லட்சமும், சமையலர் மற்றும் உதவியாளர்களுக்கு ரூ. 3 லட்சமும் வழங்க வேண்டும். போர்க்கால அடிப்படையில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மெழுகுவர்த்தி ஏந்தி கோஷம்

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் காஞ்சனா மேரி, மாவட்ட செயலாளர் விஜியா, மாவட்ட பொருளாளர் வள்ளி, நிர்வாகி தெய்வானை, அரசு ஊழியர் சங்க நிர்வாகி மகாலிங்கம், ரவி மற்றும் சத்துணவு ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story