கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.55¾ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்


கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்  ரூ.55¾ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்
x

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.55¾ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் போனது.

ஈரோடு

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடைபெற்றது. இதற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 2 ஆயிரத்து 343 மூட்டைகள் கொண்டுவந்தனர்.

இதில் 60 கிலோ மூட்டை முதல் தர திடம் ரக சர்க்கரை குறைந்தபட்ச விலையாக 2 ஆயிரத்து 640 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 680 ரூபாய்க்கும், மீடியம் ரக சர்க்கரை குறைந்தபடச விலையாக 2 ஆயிரத்து 540 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 560 ரூபாய்க்கும் ஏலம் போனது.

மொத்தம் 2 ஆயிரத்து 205 மூட்டைகளில் உள்ள 1 லட்சத்து 32 ஆயிரத்து 300 கிலோ எடையுள்ள நாட்டுச்சர்க்கரை ரூ.55 லட்சத்து 73 ஆயிரத்து 830 ரூபாய்க்கு பழனி தண்டாயுதபாணி சாமி கோவில் நிர்வாகம் சார்பாக கொள்முதல் செய்ததாக விற்பனைக் கூடத்தின் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


Next Story