கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.14¾ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்பழனி முருகன் கோவில் நிர்வாகம் கொள்முதல்


கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.14¾ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம்பழனி முருகன் கோவில் நிர்வாகம் கொள்முதல்
x

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.14¾ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரை ஏலம் பழனி முருகன் கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்தது

ஈரோடு

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.14¾ லட்சத்துக்கு நாட்டு சர்க்கரையை பழனி முருகன் கோவில் நிர்வாகம் கொள்முதல் செய்தது.

நாட்டு சர்க்கரை ஏலம்

கவுந்தப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நாட்டு சர்க்கரை ஏலம் நடந்தது. இதற்கு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் 1,111 மூட்டைகளை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதில் 60 கிலோ மூட்டை முதல் தர திடம் நாட்டு சர்க்கரை 2 ஆயிரத்து 555 ரூபாய்க்கும், மீடியம் ரக நாட்டு சர்க்கரை குறைந்தபட்ச விலையாக 2 ஆயிரத்து 470 ரூபாய்க்கும், அதிகபட்ச விலையாக 2 ஆயிரத்து 480 ரூபாய்க்கும் ஏலம் போனது.

மொத்தம் 501 மூட்டைகள் 30 ஆயிரத்து 60 கிலோ எடையுள்ள நாட்டு சர்க்கரை 12 லட்சத்து 49 ஆயிரத்து 990 ரூபாய்க்கு பழனி தண்டாயுதபாணி கோவில் நிர்வாகம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டது.

ரூ.14¾ லட்சத்துக்கு...

இதேபோல் மற்ற வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டு மொத்தம் 90 மூட்டைகளில் உள்ள 5 ஆயிரத்து 400 கிலோ எடையுள்ள நாட்டு சர்க்கரையை 2 லட்சத்து 21 ஆயிரத்து 300 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர்.

மொத்தமாக 591 மூட்டைகளில் உள்ள நாட்டு சர்க்கரை 14 லட்சத்து 71 ஆயிரத்து 290 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது என விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.


Next Story