கொடுமுடி காசிபாளையத்தில் வெள்ளம் சூழ்ந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது


கொடுமுடி காசிபாளையத்தில்  வெள்ளம் சூழ்ந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
x

கொடுமுடி காசிபாளையத்தில் வெள்ளம் சூழ்ந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.

ஈரோடு

கொடுமுடி

கொடுமுடி அருகே உள்ள வெங்கம்பூர் பேரூராட்சிக்கு உள்பட்ட காசிபாளையத்தில் கிழக்கு வீதியில் ஆற்றங்கரையோரம் வசித்து வருபவர் புஷ்பா. கடந்த 3 நாட்களாக காவிரியில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் புஷ்பாவின் வீட்டை வெள்ளம் சூழ்ந்திருந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டுக்குள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை.இதுபற்றி தகவல் கிடைத்ததும் கொடுமுடி தாசில்தார் மாசிலாமணி, மண்டல துணை தாசில்தார் பரமசிவம், ஆய்வாளர் சக்திவேல் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தார்கள். பாதிக்கப்பட்ட புஷ்பாவின் குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.


Next Story