கோத்தகிரி மார்க்கெட்டில் புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்-தாசில்தாரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் மனு


கோத்தகிரி மார்க்கெட்டில் புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்-தாசில்தாரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் மனு
x

கோத்தகிரி மார்க்கெட்டில் புதிய உழவர் சந்தை அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாசில்தாரிடம் வியாபாரிகள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி மார்க்கெட் சங்கத்தின் தலைவர் விவேகானந்தன் மற்றும் நிர்வாகிகள் தாசில்தாரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:- கோத்தகிரி பகுதியில் உள்ள விவசாயிகள் பயன் பெறும் வகையில் உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுப்பது வரவேற்கத்தக்கது. கோத்தகிரி கடைவீதி பகுதியில் அனைத்து வசதிகளுடன் உழவர் சந்தை அமைக்கப்பட்டது. இந்த உழவர் சந்தை வழித்தடத்தில் மினி பஸ்களை இயக்கவும் உத்தரவிடப்பட்டது. ஆனால் பஸ்கள் அந்த வழியாக இயக்கபடாததாலும், விவசாயிகளுக்கு பதிலாக வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டதாலும் உழவர் சந்தை சில மாதங்களில் செயலிழந்தது. இதனால் உழவர் சந்தை மூடப்பட்டது. கடந்த மாதம் மார்க்கெட்டை ஒட்டியுள்ள பகுதியில் தற்போது செயல்பட்டு வரும் கடைகளை அகற்றி புதியதாக உழவர் சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிகிறது. அவ்வாறு மார்க்கெட்டை ஒட்டி உழவர் சந்தை அமைப்பதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தில் செயல்பட்டு வரும் கடைகளை அகற்றினால், அங்குள்ள சுமார் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடையை இழக்க நேரிடுவதுடன், அவர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே மாரக்்கெட்டிற்கு வெகு அருகாமையில் உழவர் சந்தை அமைப்பதைத் தவிர்த்து வேறு பகுதியில் உழவர் சந்தையை அமைக்கவோ அல்லது அரசுப் பணம் விரயமாகாமல் தடுக்கும் வகையில் ஏற்கனவே அனைத்து வசதிகளுடன் கடைவீதி பகுதியில் அமைந்துள்ள உழவர் சந்தையை மேம்படுத்தி, மீண்டும் செயல்படுத்தவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.


Next Story