கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் அப்துல் கலாம் நினைவு நாள்


கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் அப்துல் கலாம் நினைவு நாள்
x
தினத்தந்தி 28 July 2023 12:15 AM IST (Updated: 28 July 2023 5:24 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் அப்துல் கலாம் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நாடார் நடுநிலைப் பள்ளியில் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் நினைவு நாள் விழா நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு பள்ளிச் செயலாளர் கண்ணன் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தலைமை ஆசிரியர் செல்வி, பள்ளி கமிட்டி உறுப்பினர் மணிக்கொடி, பாரதியார் அறக்கட்டளை தலைவர் முத்து முருகன், ஆசிரியர்கள் டாபின்மேரி, பிருந்தா தேவி, நித்யஸ்ரீ ஜெப அகிலா நிர்மலா தேவி ராமச்சந்திரன் அருள் காந்தராஜ் மற்றும் மாணவ-மாணவியர் அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினா். தொடர்ந்து இந்தியாவை வல்லரசாக்கு வோம், மரக்கன்றுகள் நட்டி பசுமை இந்தியாவை உருவாக்குவோம் என்று மாணவ, மாணவியர் உறுதி மொழி ஏற்றனர். மாற்று திறனாளி மாணவர்களுக்கு மணிக்கொடி டிபன் பாக்ஸ்கள் வழங்கினார்.


Next Story