கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில்தேசியக்கொடி வடிவில் அசத்திய மாணவர்கள்
கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் தேசியக்கொடி வடிவில் நின்று மாணவர்கள் அசத்தினர்.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி நாடார் நடுநிலைப்பள்ளியில் நேற்று 77-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு பள்ளி மைதானத்தில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேசியக்கொடி நிறத்தில் உடை அணிந்து, கொடி வடிவில் அமர்ந்து அசத்தினர். இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை பள்ளி செயலாளர் கண்ணன், தலைமை ஆசிரியர் செல்வி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு பள்ளி கமிட்டி உறுப்பினர்கள் ராஜா அமரேந்திரன், மணிக்கொடி, பொன் ராமலிங்கம் இனிப்பு வழங்கினர்.
Related Tags :
Next Story