கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலகத்தில்ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்
கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வட்டார கல்வி அலுவலகத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நேற்று மாலை 5 மணிக்கு காத்திருப்பு போராட்டம் நடத்தினார்கள். போராட்டத்திற்கு அனைத்திந்திய ஆசிரியர் பேரவை மாநில பொருளாளர் சு. சீனிவாசன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில துணைச் செயலாளர் கணேசன் ஆகியோர் தலைமை வகித்தனர்.
நாச்சியார்புரம் அரசு உதவி பெறும் இந்து தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மூலம் நேரடி மானியம் வேண்டி, வட்டார கல்வி அதிகாரிக்கு கடந்த டிசம்பர் மாதம் 29-ந்தேதி கருத்துக்கள் அனுப்பப்பட்டன. கடந்த 3 மாதங்களாக எவ்வித நடவடிக்க யும் எடுக்காததை கண்டித்து இந்த போராட்டம் நடந்தது. கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை செயற்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமாரசாமி, வட்டார தலைவர் செந்தில்குமரன், வட்டார செயலாளர் ஜெயக்குமார், பொருளாளர் கண்ணன் ஆகியோர் பேசினார்கள். மாலை 6 மணிக்கு போராட்டத்தை முடித்து கொண்டு ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.