திருச்செந்தூர், கோவில்பட்டியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


திருச்செந்தூர், கோவில்பட்டியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர், கோவில்பட்டியில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து நேற்று காலையில் திருச்செந்தூர் இரும்பு ஆர்ச் பகுதியில் நகர அ.தி.மு.க. சார்பில் நகர செயலாளர் மகேந்திரன் தலைமையில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியில், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கோட்டை மணிகண்டன், மாவட்ட ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் பூந்தோட்டம் மனோகரன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் சுரேஷ்பாபு, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் மகாலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அய்யாதுரை பாண்டியன், அன்புராஜ் ஆகியோர் தலைமையில் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். இந்த நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் துணை தலைவர் பழனிச்சாமி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story