கோவில்பட்டி விஸ்வகர்ம பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


கோவில்பட்டி விஸ்வகர்ம பள்ளியில்  விழிப்புணர்வு நிகழ்ச்சி
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி விஸ்வகர்ம பள்ளியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி விஸ்வகர்ம உயர்நிலைப் பள்ளியில் மக்கள் சேவை இளைஞர் இயக்க அறக்கட்டளை சார்பில் குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கார்த்திகேஸ்வரி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் குழந்தைகள் நல ஆலோசகர் சுரேத்துவாணி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் மனநலம் பற்றி பேசினார்.

நிகழ்ச்சியில் மக்கள் சேவை இளைஞர் இயக்க அறக்கட்டளை தலைவர் உமையலிங்கம், திட்ட ஒருங்கிணைப்பாளர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் குழந்தைகள் பாதுகாப்பு பற்றி பேசினர்.

நிகழ்ச்சியை யொட்டி பேச்சு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாணவி லாவண்யா நன்றி கூறினார்.


Next Story