கீழஈரால் கல்லூரியில்பண்பாட்டு கல்லூரிகளுக்கான போட்டி
கீழஈரால் கல்லூரியில் பண்பாட்டு கல்லூரிகளுக்கான போட்டி நடந்தது.
எட்டயபுரம்:
கீழஈரால் கல்லூரியில் பண்பாட்டு கல்லூரிகளுக்கான போட்டி எட்டயபுரம் அருகே கீழஈரால் தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நுண்கலை மன்றம் மற்றும் ஊடகக்குழு சார்பில் போஸ்கஸ் விழா - 23 என்ற மாநில அளவிலான கல்லூரிகளுக்கு இடையேயான கலை பண்பாட்டு போட்டிகள் நடந்தது. இதில், மெஹந்தி, அடுப்பில்லா சமையல், ரங்கோலி, பேச்சு, கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகள், குழுநடனம், தனி நடனம், குழுப்பாட்டு, தனிப்பாட்டு, ஓவியப்போட்டி, ஒதுக்கப்பட்ட பொருட்களிலிருந்து உருவாக்குதல் நிகழ்ச்சி நடந்தது.
நிறைவு விழாவில் காணொலி காட்சி வாயிலாக நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் கலந்து கொண்டனர். அருட்தந்தை விக்டர் அந்தோணிராஜ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ரா.த.திலகா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர் திரைப்பட இயக்குனர் வசந்த் சிறப்புரையாற்றினார். பின்னர் கலை பண்பாட்டு போட்டிகளில் முதலிடம் பெற்ற தூத்துக்குடி தூய தாமஸ் கல்லூரிக்குக் கேடயம் வழங்கினார். இதில், அருட்தந்தை அலெக்ஸாண்டர் சுரேஷ் உள்பட பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர