மந்தித்தோப்பு பூமாதேவி கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜை


மந்தித்தோப்பு பூமாதேவி கோவிலில்  கார்த்திகை சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 21 Nov 2022 12:15 AM IST (Updated: 21 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

மந்தித்தோப்பு பூமாதேவி கோவிலில் கார்த்திகை சிறப்பு பூஜை நடந்தது.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள மந்தித்தோப்பு துளசிங்க நகர் பூமாதேவி கோவிலில் நேற்று கார்த்திகை மாத முதல் ஞாயிற்றுக் கிழமை சிறப்பு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல், திருப்பள்ளியெழுச்சி நடந்தது.

காலை 8 மணிக்கு பூமாதேவிக்கு மஞ்சள், மாபொடி, திரவியம், பால், தேன் மற்றும் சந்தனம் உள்ளிட்ட 21 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. மதியம் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story