மூக்குப்பீறி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு விழா


மூக்குப்பீறி பள்ளியில்  பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு விழா
x
தினத்தந்தி 26 Oct 2022 12:15 AM IST (Updated: 26 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

மூக்குப்பீறி பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சங்க ஆண்டு விழா நடந்தது.

தூத்துக்குடி

நாசரேத்:

மூக்குப்பீறி தூ.நா.தி.அ.க தூய மாற்கு தொடக்கப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க விழா நடைபெற்றது. விழாவிற்கு சேகர குருவானவர் டேனியல் தலைமை தாங்கினார். சபை ஊழியர் எல்சின் வேத பாடம் வாசித்தார். தலைமை ஆசிரியை கனகரதி பெப்பின் வரவேற்று பேசினார். பரிபாலன கமிட்டி தலைவர் சாமுவேல் சிறப்புரை ஆற்றினார். எண்னும் எழுத்தும் திட்டம் பற்றி பெற்றோர்களிடம் உதவி ஆசிரியர் சாலமோன் விளக்கி கூறினார். உதவி ஆசிரியை ஜெபக்குமார் ஜேனட் நன்றி கூறினார். பெற்றோர் சார்பாக அமுதா ராணி பேசினார்.


Next Story