முடுக்கலாங்குளத்தில்புதிய கலையரங்கம் திறப்புவிழா
முடுக்கலாங்குளத்தில் புதிய கலையரங்கம் திறப்புவிழா நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள முடுக்கலாங்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 10 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. சொந்த செலவில் ரூ.50 ஆயிரம் மதிப்பில் கலையரங்கில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமரா திறப்பு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கலையரங்கத்தை திறந்து வைத்தும், கண்காணிப்பு கேமராவை இயக்கி வைத்தும், பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் வண்டானம் கருப்பசாமி, அன்புராஜ், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார், இணை செயலாளர் நீலகண்டன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.
Related Tags :
Next Story