கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி
கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி, நேஷனல் பொறியியல் கல்லூரி கலையரங்கில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் ஏ.காந்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றிக்கு வழி என்ற தலைப்பில் மாணவர்கள் இடையே கலந்துரையாடி ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் 18 பள்ளிகளில் இருந்து ஆயிரத்து 800 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் கே.ஆர்.அருணாச்சலம், இயக்குனர் எஸ்.சண்முகவேல், முதல்வர் கே.காளிதாசமுருகவேல் ஆகியோர் வழிகாட்டுதலில், அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவர் எம்.ஏ.நீலகண்டன் ஆலோசனைப்படி கல்லூரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story